ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் கொழும்புக்கான விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, குறித்த விமான சேவைகள் ஒக்டொபர் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான இயக்கம்
இதேவேளை, அந்நிறுவனமானது, தனது விமானங்களை வாரத்திற்கு மூன்று முறை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு இணையாக, ஏரோஃப்ளோட் நிறுவனம் செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் சீஷெல்ஸுக்கு விமான சேவைகளை தொடங்கவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
