Home உலகம் இலங்கையில் தரையிறங்கவுள்ள ரஷ்ய நிவாரண விமானம்!

இலங்கையில் தரையிறங்கவுள்ள ரஷ்ய நிவாரண விமானம்!

0

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

அதன்படி,  35 டொன் அளவுடன் மனிதாபிமான உதவிப் பொருட்களைக் கொண்ட விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டதாக, இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர இன்று அதிகாலை தெரிவித்துள்ளார்.

“டித்வா” புயல் 

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தமான “டித்வா” புயலின் தாக்கம் காரணமாக இதுவரையில் 639 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 10% வீதமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த பேரிடர் சூழலில் இலங்கைக்கு அநேகமான நாடுகள் தமது உதவிகளை செய்தும் நிவாரணங்களை அனுப்பியும் வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

NO COMMENTS

Exit mobile version