Home சினிமா கார்த்தியின் ‘சகுனி’ பட இயக்குனர் திடீர் மரணம்! பட விழாவுக்கு செல்லும்போது வந்த இறப்பு

கார்த்தியின் ‘சகுனி’ பட இயக்குனர் திடீர் மரணம்! பட விழாவுக்கு செல்லும்போது வந்த இறப்பு

0

கார்த்தி நடித்த சகுனி படத்தினை இயக்கியவர் சங்கர் தயாள். 2012ல் வெளிவந்த அந்த படம் அரசியல் கதையில் பலரது கவனத்தை ஈர்த்தது.

தற்போது குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அவர் தனது அடுத்த படத்தை இயக்கி இருக்கிறார்.

மரணம்

இன்று குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் பிரெஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்துகொள்ள வந்தபோது மாலை 5.45க்கு இயக்குனர் சங்கர் தயாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து இருக்கிறார்.

கொளத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்ற நிலையில், வரும்போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version