சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் தற்போது ராமாயணா, மேரே ரஹோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் படம் தமிழில் மாபெரும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக சாய் பல்லவி எந்த தமிழ் படத்தில் நடிக்கப்போகிறார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
பிரதீப் ரங்கநாதனின் LiK படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.. புதிய ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
தலைவர் 173
தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தில் சாய் பல்லவி நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்கிறாராம். அதே போல் ரஜினி – கமல் கூட்டணியில் உருவாகும் தலைவர் 173 படத்திலும் சாய் பல்லவி கமிட் ஆகியுள்ளார் என்கின்றனர்.
சம்பளம்
இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக அவர் ரூ. 15 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ரஜினியின் பிறந்தநாளன்று தலைவர் 173 அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.
