யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா மிக சிறப்பாக
இடம்பெற்றுள்ளது.
குறித்த திருவிழா, நேற்று(25) மாலை 5மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி மாலை 6
மணியளவில் திருப்பலி ஆரம்பமானது.
இந்த திருவிழாவில் செம்பியன் பற்று பங்கின் மைந்தர்கள் உட்பட்ட குருக்கள் மற்றும் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
திருவிழா திருப்பலியை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல
மூலைகளில் இருந்து வந்ததை காணக்கூடியதாக இருந்தது.
