Home இலங்கை அரசியல் கோப் ,கோபா குழுக்களின் தலைமைப் பதவியை கோரும் சஜித் அணி

கோப் ,கோபா குழுக்களின் தலைமைப் பதவியை கோரும் சஜித் அணி

0

முக்கிய குழுக்களின் தலைமைப் பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya) கோரிக்கை விடுத்துள்ளது.

பத்தாவது நாடாளுமன்றத்தில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின்
பிரதி தவிசாளர் பதவிகளுக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோப் (Cope Committee) , கோபா மற்றும் அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவியை தமது
அணிக்கு வழங்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

எதிரணிகள் கூட்டாக மனு

சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகப் பண்புகளை இந்த அரசு மதிக்கின்றதெனில்,
நாடாளுமன்றக் குழுக்களின் தலைமைப் பதவி எதிரணிகளுக்கு வழங்கப்படுவதே சிறப்பாக
அமையும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு எதிரணிகள் கூட்டாக
மனுவொன்றைக் கையளிக்கத் திட்டமிட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version