Home இலங்கை அரசியல் நாடாளுமன்றில் நடுவே சென்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்த மொட்டு எம்.பி

நாடாளுமன்றில் நடுவே சென்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்த மொட்டு எம்.பி

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே தனது முடிவை அறிவித்துள்ளனர்.

அறிவிப்பு விடுத்த பின்னர் சபையின் நடுவே சென்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதவளித்து எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

பொதுத் தேர்தல்

நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

2020 பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் கொடித்துவக்கு பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

மேலும் அவர், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 114,319 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/sajith-has-joined-the-karunadasa-kodithuwa-party-1724241130

NO COMMENTS

Exit mobile version