Home இலங்கை அரசியல் மின் தடை குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய சஜித்

மின் தடை குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய சஜித்

0

மீண்டும் ஒரு மின் தடை ஏற்படுவதைத் தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (14) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த நேரத்திலும் மற்றொரு மின் தடை ஏற்படலாம், அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை தேவை அதிகரிக்கும் போது மற்றொரு மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்

இது குறித்து சபையில் ஒரு அறிக்கையை வெளியிடுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரைக் கேட்க விரும்புகிறோம் என்று சஜித் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, இலங்கை மின்சார சபையோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரோ விரைவில் இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிடக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version