Home இலங்கை அரசியல் நாட்டைக் கட்டியெழுப்ப உத்தரவாதம் அளிக்கின்றேன்: சஜித் உறுதி

நாட்டைக் கட்டியெழுப்ப உத்தரவாதம் அளிக்கின்றேன்: சஜித் உறுதி

0

நான் மறைந்த ஜனாதிபதியின் மகன் என்ற வகையில் நாட்டைக் கட்டியெழுப்பும்
உத்தரவாதத்தை உங்களுக்கு அளிக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் (Batticaloa), நேற்று (03.07.2024) இடம்பெற்ற ஏறாவூர் அல்முனீறா
பாலிகா மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் கற்றல் வகுப்பறையை கையளிக்கும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

”வடக்கு – கிழக்கு உட்பட சீரழிந்து கிடக்கும்
நாட்டை தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்ற இன மத பேதமின்றிக் கட்டியெழுப்ப வேண்டும்.

விசேட திட்டம் 

அதற்குரிய காலம் கனிந்துள்ளது. இவ்வாண்டு முடிவடைவதற்குள் 10,000இற்கு
மேற்பட்ட பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். 

மேலும், ஸ்மார்ட் டிஜிட்டல் கணினி கற்றல் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். அந்த
வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 360 பாடசாலைகள் வளமடையும்” என குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு, மட்டக்களப்பு வேலையில்லா பட்டாதாரிகளின் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில்
கதைத்து அதற்கான தீர்வினை பெற்றுதருவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  வாக்குறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் நேற்று புதன்கிழமை 2 வது நாளாக வேலை
கோரி ஆர்பாட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்ட
இடத்திற்கு மாலை 6 மணழக்கு சென்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை
கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது வேலையில்லா பட்டதாரிகள் மேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாணத்தில்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு ள்ளதாகவும் கிழக்கு
மாணகாணத்தில் நியமனங்கள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் பல
கஸ்டங்களுக்கு மத்தியில் கல்வியை கற்று பட்டங்களை பெற்றபோதும் இதுவரை
அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்கவில்லை எனவும்,  எதிர்கட்சி
தலைவரிடம் தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில்
கதைப்பதாகவும் முடிந்தளவு தீர்வை பெற்றுதர முயற்சிப்பதாக தெரிவித்து
அங்கிருந்து வெளியேறிச் சென்றதையடுத்து ஆர்பாட்காரார்களும் அங்கிருந்து
விலகிச் சென்றனர்.

செய்தி – சரவணன்

NO COMMENTS

Exit mobile version