தமது கல்வி தகுதிகளையும் தாம் நாளையதினம்(18) நாடாளுமன்ற சபையில் சமர்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(17) அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கல்வி தகுதி
தமது கல்வி தகுதியை நிரூபிக்கமுடியாமல், முன்னாள் சபாநாயகர் பதவி விலகிய நிலையில் தற்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கல்வி நிலை தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஆளும் கட்சியினர் விடுத்த சவால் ஒன்றுக்கு பதிலளித்தபோதே, பிரேமதாச தமது கல்வி சான்றிதழ்களை நாளை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஆளும் கட்சியினரால் கல்வி தகுதிகள் தொடர்பில் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தனாவின் சான்றிதழ்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று சபையில் சமர்ப்பித்துள்ளார்.