Home சினிமா ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. நானும் அஜித் ரசிகன் தான்: சர்ச்சைக்கு டிடிவி தினகரன் பதில்

‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. நானும் அஜித் ரசிகன் தான்: சர்ச்சைக்கு டிடிவி தினகரன் பதில்

0

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் சமீபத்தில் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். மற்ற நடிகர்களின் நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் என பல இடங்களில் அந்த கோஷத்தை எழுப்பி வந்தனர்.

டிடிவி தினகரனின் திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அங்கு ‘கடவுளே அஜித்தே’ என மாணவர்கள் கோஷம் அதிக நேரம் எழுப்பப்பட்ட வீடியோ வைரல் ஆனது.

இது அநாகரீகமாக இருக்கிறது என நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டு, கோஷம் எழுப்புவதை உடனே நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். தன் பெயர் உடன் எதுவும் சேர்க்க தான் விரும்பவில்லை என்றும் கூறி இருந்தார்.

நாக சைதன்யா – சோபிதா காதல் தொடங்கியது இப்படித்தான்! அப்போ வதந்திகள் எல்லாம் உண்மைதானா

நானும் அஜித் ரசிகன் தான்

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி டிடிவி தினகரன் தற்போது பேசி இருக்கிறார். ‘கடவுளே அஜித்தே’ என கோஷம் வந்ததால் நான் அதிர்ச்சி ஆனதாக செய்தி வந்தது. நான் அதிர்ச்சி எல்லாம் ஆகவில்லை.

“நானும் அஜித்தின் fan தான். எனக்கும் அஜித் பிடிக்கும். நான் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது பலமுறை அஜித்குமார் என பெயர் வைத்து இருக்கிறேன்.”

“அஜித் எனக்கு பிடிக்கும் என பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். விஜய்யும் எனக்கு பிடிக்கும் தான்”  என டிடிவி தினகரன் கூறி இருக்கிறார்.

NO COMMENTS

Exit mobile version