Home சினிமா 21 நாட்கள் பிக்பாஸ் 9ல் விளையாடிய ஆதிரை சௌந்தரராஜன் வாங்கிய மொத்த சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

21 நாட்கள் பிக்பாஸ் 9ல் விளையாடிய ஆதிரை சௌந்தரராஜன் வாங்கிய மொத்த சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

0

பிக்பாஸ் 9

கடந்த அக்டோபர் 5ம் தேதி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.

20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸில் மக்கள் பார்த்து பழக்கப்பட்ட முகங்களும் இருந்தனர். பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, ஆனால் இதுவரை ஒளிபரப்பான சீசன்களில் மிகவும் மோசமான சீசனாக அமைந்துள்ளது.

திடீரென வந்த போன் கால், பாண்டியை பளார் விட்ட சேரன்… அய்யனார் துணை பரபரப்பு எபிசோட்

தங்கள் அடையாளத்தை காட்ட வந்தவர்கள் அதற்காக விளையாடுவது போல தெரியவில்லை.

ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதியும் நிகழ்ச்சி எப்படி செல்கிறது, என்ன விமர்சனம் வருகிறது போன்ற விஷயங்களை கூறிக்கொண்டே தான் இருக்கிறார், ஆனால் எதுவும் மாறவில்லை.

சம்பளம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சாரா வெளியேறினார்கள். கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு ஆதிரை சௌந்தரராஜன் வெளியேற்றப்பட்டார்.

தற்போது இவரது சம்பள விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஆதிரைக்கு ஒரு நாளைக்கு ரூ. 12 முதல் ரூ. 15 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மொத்தம் 21 நாட்கள் உள்ளே இருந்தவர் சுமார் ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளாராம். 

NO COMMENTS

Exit mobile version