Home சினிமா தமன்னா, சமந்தா பெயர் போட்டோவுடன் நடந்திருக்கும் மோசடி.. தெலுங்கானாவில் அதிர்ச்சி

தமன்னா, சமந்தா பெயர் போட்டோவுடன் நடந்திருக்கும் மோசடி.. தெலுங்கானாவில் அதிர்ச்சி

0

நடிகை தமன்னா, சமந்தா ஆகியோர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பாப்புலர் நடிகைகள் தான்.

அவர்களது பெயர்கள் மற்றும் போட்டோக்களை பயன்படுத்தி நடந்திருக்கும் சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் சமந்தா, தமன்னா பெயர்

தெலுங்கானாவின் ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு வாக்காளர்கள் பட்டியலில் நடிகைகள் சமந்தா, தமன்னா, ராகுல் ப்ரீத் போன்றவர்கள் பெயர் போலியாக சேர்க்கப்பட்டு இருப்பது தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அவர்களது பெயர், போட்டோ உடன் போலியாக பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதனால் மோசடி நடந்திருப்பதாக சர்ச்சை வெடித்து இருக்கின்றது.

சமந்தா, தமன்னா ஆகியோரின் வாக்காளர் லிஸ்ட் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.  

NO COMMENTS

Exit mobile version