Home முக்கியச் செய்திகள் திருகோணமலையில் சம்பந்தனுக்கு பலர் அஞ்சலி : இறுதிக்கிரியைகள் நாளை

திருகோணமலையில் சம்பந்தனுக்கு பலர் அஞ்சலி : இறுதிக்கிரியைகள் நாளை

0

மறைந்த தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் (R.Sampanthan) பூதவுடலுக்கு இன்றும் (06) பொதுமக்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

திருகோணமலையில் (Trincomalee) உள்ள அவரது இல்லத்தில் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதி அஞ்சலி 

இன்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் (Shanmugam Kugathasan), நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran), எஸ். சிறீதரன் (S. Shritharan), இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள், கட்சி போராளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை நாளை (07) இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/sampanthan-passes-away-final-tribute-tomorrow-1720264300?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version