Home இலங்கை அரசியல் இரா. சம்பந்தனின் மறைவுக்கு வடக்கு ஆளுநர் இரங்கல்

இரா. சம்பந்தனின் மறைவுக்கு வடக்கு ஆளுநர் இரங்கல்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் (R. Sampanthan) மறைவுச் செய்தி அறிந்து கவலை அடைகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனின் மறைவிற்கு வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “சுமார் ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் தமிழ் மக்களின்
உரிமைக் குரலாக இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ததுடன், தமிழ்
மக்களின் உரிமைக்காக சர்வதேச ரீதியிலும் செயற்பட்ட தலைவராக காலம் சென்ற இரா.
சம்பந்தன்  காணப்படுகின்றார்.

இலங்கை மக்களுக்கு பேரிழப்பு

இன ஐக்கியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் நாட்டு
மக்களின் நன்மைக் கருதி அன்னார் செயற்பட்டார் என்றால் மிகையாகாது.

இத்தகைய
ஒரு பெரும் தலைவரின் இழப்பானது தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் நிரப்ப
முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

அன்னாரின் மறைவானது இலங்கை வாழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்து கொண்டிருந்த குரல் இன்று
மௌனித்துள்ளது.

இரங்கல் செய்தி

காலம் சென்ற இராஜவரோதயம் சம்பந்தனின் ஆத்மா
சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்.

அன்னாரின் பிரிவால் மீளாத் துயரில் வாடும்
அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் எனது ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.என்றார்.

NO COMMENTS

Exit mobile version