Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் சரத் பொன்சேகா நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் சரத் பொன்சேகா நீக்கம்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சகல நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை (Sarath Fonseka) நீக்க கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி,  சரத் பொன்சேகாவை நாடாளுமன்றக் குழுக் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் 

அவரது அண்மைய நடவடிக்கைகள் அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, அடுத்த பொதுத் தேர்தலில் (General Election) அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பனவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லை என இதற்கு முன்னர் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version