Home முக்கியச் செய்திகள் சர்ச்சைக்குரிய கெஹலியவின் பெயரில் அமைந்த பாடசாலை – அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குரிய கெஹலியவின் பெயரில் அமைந்த பாடசாலை – அதிரடி உத்தரவு

0

கண்டி (Kandy) – வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை (Kundasale) பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை மாற்ற மத்திய மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலையை பெயர் மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு நேற்றைய தினம் (16.10.2024) ஆளுநர் எஸ்.பி.எஸ்.அபயகோன் (S. B. S. Abhayakon)  அனுமதியளித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கம்

கடந்த காலங்களில் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, இக்கல்லூரிக்கு குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை என பெயரிடுவதற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version