Home முக்கியச் செய்திகள் பாடசாலை கட்டிடத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம் – மாணவன் பலி – பலர் காயம்

பாடசாலை கட்டிடத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம் – மாணவன் பலி – பலர் காயம்

0

பாடசாலை ஒன்றில் கட்டிடத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் இன்று (12) பிற்பகல் பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலையில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 16 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 17 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

NO COMMENTS

Exit mobile version