Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் தொடரும் துயரம்: காவல்துறை வாகனத்தில் செல்லும் பாடசாலை மாணவர்கள்

தமிழர் பகுதியில் தொடரும் துயரம்: காவல்துறை வாகனத்தில் செல்லும் பாடசாலை மாணவர்கள்

0

கிளிநொச்சியில் (Kilinochchi) பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் காவல்துறை வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (11.6.2024) கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் விசனம்

முகமாலை பகுதியில் பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லாத சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது. 

எனினும் சம்மந்தப்பட்ட துறையினர் குறித்த விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில், இன்றைய தினம் காவல்துறையினர்  தமது வாகனத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களிற்கு முன்னர், குறித்த பகுதியில்   பெற்றோர் ஒருவர் பேருந்துக்கு குறுக்காக மோட்டர் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றி அனுப்பிய சம்பவமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/school-student-going-school-police-van-kilinochchi-1718092530

NO COMMENTS

Exit mobile version