யாழில் (Jaffna) உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள்
மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5 க்கும்
மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றிற்கு
சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி கேட்டபோது மாணவர்கள் பதில்
வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
நிர்வாக ரீதியாக நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆசிரியர்
மாணவர்கள் மீது தாக்கியது உண்மை என தெரிவித்துள்ளார்.
எனினும் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் பாடசாலை என்ற வகையில் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய
நடவடிக்கைகளை தாம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்தி – கஜிந்தன்
