நாட்டில் மரக்கறி வகைகளின் விலை வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மரக்கறிகளின் விலை உயர்வு காரணமாக நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில மரக்கறி வகைகள் கிலோ ஒன்று ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மரக்கறி விலைகள் உயர்வடைந்ததாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி வகைகள் அழிவடைந்ததனால் தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை உயர்வடைந்துள்ளதாகவும், அதனால் சில்லறை விலைகளும் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
