Home சினிமா எதிர்நீச்சல் சீரியல் நடிகருக்கு மறுமணம், வைரலாகும் போட்டோ… ஆனால்?

எதிர்நீச்சல் சீரியல் நடிகருக்கு மறுமணம், வைரலாகும் போட்டோ… ஆனால்?

0

எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகியுள்ளது, அதில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் அவர்கள் இயக்கிய இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்தார்கள்.

4 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பான இந்த தொடர் இந்த வருட ஆரம்பத்தில் தான் முடிவுக்கு வந்தது.

மறுமணம்

தமிழில் வெற்றியடையும் தொடர்கள் மற்ற மொழிகளில் ரீமேக் ஆவது வழக்கமான ஒரு விஷயம். எதிர்நீச்சல் தொடர் மலையாளத்தில் காணல் பூவு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

எதிர்நீச்சல் மலையாள தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மறுமணம் செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம், அந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ஆதி குணசேகரன் கேரக்டர் கம்பீரமாகவும் திமிர் பிடித்த கதாபாத்திராக இருந்தது, அந்த வேடத்தை என்னடா செய்து வைத்துள்ளீர்கள் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

Source: https://cineulagam.com/article/second-marriage-for-ethirneechal-serial-actor-1728038321

NO COMMENTS

Exit mobile version