Home இலங்கை அரசியல் பதிவு செய்ய விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு இரண்டாம் சுற்று நேர்காணல்

பதிவு செய்ய விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு இரண்டாம் சுற்று நேர்காணல்

0

இந்த ஆண்டு பதிவு செய்ய விரும்பும் புதிய அரசியல் கட்சிகள் இந்த மாதம்
முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் இரண்டாவது சுற்று நேர்காணல்களுக்கு
உட்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஐந்து பேர் கொண்ட குழு இது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான புதிய அரசியல் கட்சிகளின் பதிவு பெப்ரவரி 28ஆம் திகதி
ஆரம்பித்தது.

மார்ச் 28 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
எனினும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட
பின்னர் இந்த வருடாந்த செயல்முறை தாமதமானது.

முறையான மதிப்பீட்டு நிலை

இந்தநிலையில், தேர்தல் ஆணையகம் 83 விண்ணப்பங்களைப் பெற்றதாக தேர்தல் ஆணையாளர்
சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவற்றில், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததற்காக 36 நிராகரிக்கப்பட்டன. இதனடிப்படையில் 47 விண்ணப்பங்கள் முறையான மதிப்பீட்டு நிலைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version