Home இலங்கை அரசியல் மன்னார் ஆயரை இலக்கு வைத்து திரைமறைவில் இரகசிய திட்டம்…

மன்னார் ஆயரை இலக்கு வைத்து திரைமறைவில் இரகசிய திட்டம்…

0

மன்னார் காற்றாலை விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், ஜனாதிபதியை சந்தித்த மன்னார் ஆயர் 14 காற்றலைகளை அமைக்கும் திட்டத்தில் மாற்றமில்லை ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லையென்று குறிப்பிட்டார்.

நான் ஒப்பந்தம் செய்யததாக கூறுவதிலும் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பத்திரிக்கை செய்தியொன்றில் ஆயருடனான சந்திப்பில் இணக்கம் எட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டுமன்றி மன்னார் ஆயராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவர் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகின்றார்.

ஒரு மதத்ததலைவரை இவ்வாறு இலக்கு வைப்பதையோ தாக்குவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓய்வுநிலை சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,

சமூகஊடகங்களில் தாங்கள் எழுவது எல்லாம் சரியென்று நினைத்து சிலர் எழுதுகின்றார்கள்.

மன்னர் ஆயராக அவர் வருவதற்கு முன்பே அவர் பல பதவிகளை வகித்தவர்.எனவே அவருக்கு மன்னர் பற்றிய தெளிவு அதிகமாக உள்ளது என குறிப்பிட்டார்.

இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி.. 

NO COMMENTS

Exit mobile version