Home இலங்கை சமூகம் வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம்..!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம்..!

0

கடலென குவிந்த பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க, வரலாற்று சிறப்பு
வாய்ந்த அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி
முருகன் ஆலய தேர்த்திருவிழா இன்று(6) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 15
ஆம் நாளின் தேர்த்திருவிழா இன்று (06) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

 தேர் திருவிழா

இதன்போது சந்நிதி முருகன் தேர் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்துகொண்டு வேலவனின் அருளை பெற்றனர்.

உள் நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் புலம்பெயர்
தமிழர்களும் தாயகத்திற்கு வருகை தந்து செல்வச் சந்நிதி முருகன் தேர்த்
திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர். 

NO COMMENTS

Exit mobile version