Home இலங்கை அரசியல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் மீறப்படுமா! செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மீறப்படுமா! செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

0

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக
நிறுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (02.12.2024) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக
சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசியல் சாசனத்திலே 13ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இனப் பிரச்சினை

இது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மீறுகின்ற ஒரு செயற்பாடாக அமையும். ஒரு
அரசியல் சாசனம் எழுதப்படும் போது, தமிழ் தரப்பின் ஆலோசனையும் பெறப்பட வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் நிறுத்தப்படக் கூடாது. அத்துடன், தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய
அரசியல் சாசனம் அமைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version