சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர்.
இவரது நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான அமரன் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது. ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோர் இயக்கத்தில் படங்கள் நடிகக உள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தின் 3 நாள் வசூல் வேட்டை… மொத்த வசூல் விவரம்
நடிகரின் மனைவி
அமரன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் தனது மனைவி குறித்து எமோஷ்னலாக பேசியுள்ளார்.
அவர் சினிமா துறையில் எங்கிருந்து யார் அம்பை விட்டு தாக்குவார்கள் என தெரியாது, எங்கிருந்து பிரச்சனை வருகின்றது என்பதே தெரியாது. பிரச்சனைகளால் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு போகலாம் என்ற எண்ணம் வந்தபோது மனைவியிடம் தான் முதலில் கூறினேன்.
அவர் தான் சினிமாவை விட்டு போகக்கூடாது என்று சொன்னார், விலகாமல் நடித்துக் கொண்டிருப்பதற்கு எனது மனைவி ஆர்த்தி தான் காரணம் என தெரிவித்துள்ளார்.