இடதுசாரித்துவத்தினை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி(JVP) இன்று பெரும்பான்மையின தேசிய வாதத்தோடு இணைந்து செயற்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த
அவர்,
தமிழ் கட்சிகளின் ஒற்றுமை
“தமிழ் கட்சிகள் ஒற்றுமை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால்
வெளியிடப்பட்டுள்ள ஆதங்கம் உண்மையானது.
அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆசனங்களுக்காகவே பிரிந்து நிற்கின்றோம் என கூறினார்கள். இந்த தேர்தலில் தமிழ்
கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் என்று
முயற்சிகளை எடுத்திருந்தோம்.
அது சாத்தியப்படவில்லை. எனவே அது மனவேதனையை
தருகிறது.
திருகோணமலை மற்றும் அம்பாறையில் ஒன்று சேர்ந்து போட்டியிட தீர்மானித்தோம்.
தமிழரசுக் கட்சி
ஆனால் அம்பாறையில் தமிழரசுக் கட்சி குழப்பி விட்டது. அம்பாறையில்
பிரதிநிதித்துவம் இழக்கும் நிலை தமிழரசுக் கட்சியால் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நாம் ஐந்து கட்சிகள் தற்போது ஒன்றாக இருக்கிறோம். ஏனையவர்களையும்,
உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் செய்வோம். மக்கள் கோபத்தில்
உள்ளார்கள். நர்கள் பிரிந்ததால் அவர்கள் வெறுப்படைந்து உள்ளார்கள். நாங்கள்
போகும் போது அவர்கள் நேரடியாகவே கூறுகிறார்கள்.
தேர்தலின் பின்னராவது தமிழ் கட்சிகள் இணைந்து செல்வதற்கான வாய்ப்புக்கள்
உருவாக்கப்படவேண்டும்” என்றார்.