வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள அனைத்து மக்களும் தன்னை ஆதரிப்பார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும்
சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (14.10.2024) காலை 11.30 மணியளவில் நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல. இலங்கை முழுவதும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மக்கள் மாற்றம் என்ற ஒன்றை விரும்புகிறார்கள்.
இளைஞர்களின் வேண்டுகோள்
அந்த
மாற்றத்தின் விளைவாக இலங்கையின் தென்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார
திசநாயக்கவின் ஆட்சி நடைபெற்று வருகின்ற இந்த காலப்பகுதியில் தமிழ்
மக்களும் மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள்.
இளைஞர்கள் மக்களுடைய பிரச்சினைகளை
நாடாளுமன்றத்தில் கதைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகின்ற அதே
சந்தர்ப்பத்தில் அவர்கள் கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையானது
மக்களிடையே காணப்படுகிறது.
அந்த வகையிலே இம்முறை தேர்தலில் நான் தமிழரசு கட்சியின் சார்பில் இளைஞர்களின்
வேண்டுகோளுக்கு அமைவாக போட்டியிடுகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.