Home சினிமா சிறு வயதில் அப்படி நடித்தது தவறுதான்.. சீரியல் நடிகை தேவிப்பிரியா ஆதங்கம்

சிறு வயதில் அப்படி நடித்தது தவறுதான்.. சீரியல் நடிகை தேவிப்பிரியா ஆதங்கம்

0

தேவிப்பிரியா

சன் டிவியின் பூவே பூச்சூடவா மற்றும் ஜீ தமிழின் புதுப்புது அர்த்தங்கள் என பல தொடரில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தேவிப்பிரியா.

90களின் பிற்பகுதியில் சினிமாவில் நடிகையாக களமிறங்கினார். அஜித்தின் வாலி உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு சின்னத்திரை பக்கம் வந்த அவருக்கு அதிகம் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் கிடைத்தது.

தற்போது வரை 50க்கும் அதிகமான சீரியல்களில் அவர் நடித்து இருக்கிறார். மேலும் இவர் நிறைய படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் வலம் வருகிறார்.

பாட்ஷா படத்தில் ரஜினி தம்பியாக நடித்த நடிகரை நினைவிருக்கா?.. முகம் சிதைந்து! என்ன ஆனது?

தேவிப்பிரியா ஆதங்கம்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் சினிமா மற்றும் வாய்ப்பு குறித்து சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார். அதில், ” நான் சிறு வயது முதல் சின்னத்திரையில், அதாவது சீரியல்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன்.

இதனால் எனக்குச் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. என்னுடன் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை தேவதர்ஷினி என பலர் கதை தேர்வு செய்து நடித்தார்கள்.

அதனால் அவர்கள் இப்போதும் சினிமாவில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்துவிட்டேன். அதனால் எனக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version