Home இலங்கை அரசியல் இஷாரா கைதினால் பதறும் நாமல் : அரசு வெளியிட்டுள்ள தகவல்

இஷாரா கைதினால் பதறும் நாமல் : அரசு வெளியிட்டுள்ள தகவல்

0

குற்றச் செயலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச அச்சம் அடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாமல் தொடர்பான எந்தத் தகவலையும் இஷாரா இன்னும் வெளியிடவில்லை. அது குறித்த நாமல் அச்சமடையத் தேவையில்லை என பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இஷாரா தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஷாரா கைது

இவ்வாறான நிலையில், இஷாராவை கைது செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

செவ்வந்தியை கைது செய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருடம் சென்றுள்ள நிலையில், மக்களின் குறைகளை தீர்க்க அரசாங்கம் எவ்வளவு காலம் எடுக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தின் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் நாமல் விமர்சனம் செய்துள்ளார்.

போதைப்பொருள் பாதாள உலகத்துக்கு எதிராக ஊழியர்களும், உளவுத்துறையும், தேவையான வளங்களும் ஏற்கனவே உள்ளன.

நாமல் விசனம்

இந்நிலையில், எதிர்க்கட்சி ஆதரவு தேவையில்லை எனவும் நாமல் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் தவறு செய்தால், அந்த தவறுகளை சுட்டிக்காட்ட எதிர்க்கட்சியாக நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என நாமல் குறிப்பிட்டுள்ளாார்.

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாமல், தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே அதன் செயற்பாடு குறித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கும் என நாமல் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version