Home சினிமா குளிர்பானம் விளம்பரங்களில் நடிப்பது தவறா?.. ஷாருக்கானின் ஷாக்கிங் பதில்

குளிர்பானம் விளம்பரங்களில் நடிப்பது தவறா?.. ஷாருக்கானின் ஷாக்கிங் பதில்

0

ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், ஷாருக்கான் பேட்டி ஒன்றில் குளிர்பானம் போன்ற விளம்பரங்களில் நடிப்பது குறித்து சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

ஷாக்கிங் பதில் 

அதில், ” குளிர்பானம் குழந்தைகளுக்கு மோசமானது என்று நினைத்தால் அதனை தடை செய்துவிடுங்கள். புகைப்பிடிப்பது மோசமானது என்று நினைத்தால் இந்தியாவில் அதனை தயாரிப்பதை நிறுத்திவிடுங்கள்.

ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. இந்த முன்னணி நடிகரா?

சில பொருள்கள் மோசமானது என்று நினைத்தால் அதை நிறுத்தாமல் அது தொடர்பான விளம்பரங்களில் நடிப்பவர்களை குறை கூறி வருகின்றனர்.

நான் நடிகர், வேலை செய்வதற்கு எனக்கு வருமானம் கிடைக்கிறது. அரசாங்கத்தை கேள்வி எழுப்புங்கள் அவர்களுக்கு இதன் மூலம் வருவாய் கிடைக்கிறது. அதை விட்டுவிட்டு என் வருமானத்தை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியர்கள் நன்றாக படித்தவர்கள், சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து புகைப்பிடிக்கக்கூடாது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்” என்று கூறியுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version