Home சினிமா எப்படி செய்றீங்க, ரொம்ப கஷ்டம்!! அஜித்திடம் புலம்பிய மனைவி ஷாலினி

எப்படி செய்றீங்க, ரொம்ப கஷ்டம்!! அஜித்திடம் புலம்பிய மனைவி ஷாலினி

0

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இதில் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒருபக்கம் இருக்க அஜித் கார் ரேஸ் டீம் மீதும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

கமலின் 237 – வது படம் குறித்து வந்த அதிரடி அப்டேட்.. இணைந்த முன்னணி இசையமைப்பாளர்

இந்நிலையில், பிரபல கார் ரேஸ் வீராங்கனையான அலிஷா அப்துல்லா ஒரு பேட்டியில் அஜித் குறித்தும் அவருடைய மனைவி ஷாலினி குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

ஏன் தெரியுமா 

அதில், “அஜித்தின் ரேஸ் காரை ஒரு முறை ஷாலினி எடுத்து ஓட்டினார். ஓட்டி முடித்துவிட்டு ஷாலினி அஜித்திடம், “எப்படி இது போன்ற காரை ஓட்டுறீங்க, ரொம்ப கஷ்டம் ப்பா” என்று கூறினார்.

சாதாரண கார்களை போன்று ரேஸ் கார்களை எளிதாக ஓட்டிவிட முடியாது. அதன் ஸ்டீயரிங் உள்ளிட்டவைகள் வித்தியாசமாக இருக்கும்” என்று பகிர்ந்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version