Home இலங்கை அரசியல் ஷானி அபேசேகரவின் நியமனத்திற்கு பொதுஜன முன்னணி எதிர்ப்பு

ஷானி அபேசேகரவின் நியமனத்திற்கு பொதுஜன முன்னணி எதிர்ப்பு

0

குற்ற விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டமைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் நல்லாட்சி மற்றும் சட்டம் தொடர்பில் பேசி வந்த மக்கள் விடுதலை முன்னணி போன்றதொரு கட்சி தனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுத்ததன் மூலம் தனது எதிரிகளை அடக்குவதற்கு எந்தவொரு இழிவான செயலையும் மேற்கொள்ள கட்சியின் ஆட்சியாளர்கள் ஆயத்தமாக இருப்பதனையே வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்திலும் அரசியல் மேடைகளிலும் உரையாற்றிய ஷானி அபேசேகரவை குற்ற விசாரணைப் பிரிவின் பிரதானியாக நியமிப்பது ஓர் பிழையான தீர்மானம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம், நாட்டை மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version