முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம வீட்டிலிருந்து வெளியேறும் போது, அங்கு அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.
எனினும், அங்கு எதிர்பார்க்கப்பட்ட கூட்டம் அவருக்காக சேரவில்லை.
ஆனால், அங்கிருந்த மகிந்தவின் ஆதரவாளர்கள் சிலர், எங்கள் அரசருக்கு அநியாயம் இழைக்கப்பட்டது என கோஷமிட்டுள்ளனர்.
அத்துடன், மகிந்தவை புகைப்படம் எடுக்க வேண்டாம் என அவரின் ஆதரவாளரான ஒரு பெண், ஊடகவியலாளர்களிடம் முரண்பட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யுத்தத்தை முடித்த தலைவருக்கு அநீதி இழைத்து விட்டதாகவும் மகிந்தவின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
