Home முக்கியச் செய்திகள் தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு

தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு

0

நீர்கொழும்பு (Negombo) – தலாதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்றிரவு (28) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

எனினும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

மேலும் நீர்கொழும்பு காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version