Home இலங்கை அரசியல் உத்திகவின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உத்திகவின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் (Uddika Premarathna) மகிழுந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் உதவி காவல்துறை அத்தியட்சகரின் சில சொத்துக்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றம் தடை விதித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, குறித்த உதவி காவல்துறை அத்தியட்சகருக்கு சொந்தமான 3 மகிழுந்துகள் மற்றும் 2 காணிகளை இன்று (18) முதல் 3 மாதங்களுக்குப் பயன்படுத்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு

இது குறித்து கையூட்டலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவின் சட்டவிரோத பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த கோரிக்கைக்கு அமைய இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான உதவி காவல்துறை அத்தியட்சகர் போதைப்பொருள் வர்த்தகத்தினூடாக சட்டவிரோதமாகப் பணம் ஈட்டியமை தொடர்பிலான விசாரணைகளுக்கமைய இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version