Home முக்கியச் செய்திகள் மக்களை திசை திருப்பும் தமிழரசுக் கட்சியினர் : வெளியான அறிக்கை

மக்களை திசை திருப்பும் தமிழரசுக் கட்சியினர் : வெளியான அறிக்கை

0

தமிழரசுக் கட்சியினர், சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரித்து சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக மக்களை திசைதிருப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஜதீந்திரா (Jatindra) தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களால் இன்றையதினம் (18) திருகோணமலை (Trincomalee) மாவட்ட காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது.

ஊடக அறிக்கை

அத்தோடு, ஜனாதிபதி தேர்தலானது இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் இத்தறுவாயில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டப் பிரிவின் சார்பில் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், குறித்த ஊடக அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜதீந்திரா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா. அரியநேத்திரன் (P. Ariyanethiran), ஒரு தமிழ் தேசிய பொது நிலைப்பாட்டின் அடிப்படையில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

தமிழ் தேசிய பிரச்சினை

பொதுவாக தமிழ் தேசிய பிரச்சினைகள் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது அத்தோடு தமிழ் மக்களது ஒற்றுமையையும் பலத்தினையும் காண்பிக்கும் நோக்கத்துடனேயே அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்க இலங்கை தமிழ் அரசு கட்சியினர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக மக்களை திசைதிருப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

தேர்தல் நெருங்கும் இறுதித்தறுவாயில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுவதுடன் மக்கள் தொடர்ச்சியாக தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் தங்களுடன் நிப்பார்கள் எனும் நம்பிக்கை இருந்தாலும் கூட இறுதி நிமிடங்களில் தம்மை திசை திருப்பும் செயற்பாடுகளில் தமிழ் அரசு கட்சியினர் செயற்படுகின்றனர் அது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version