Home இலங்கை அரசியல் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களை சபையில் நினைவுகூர்ந்த சிறீதரன்

தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களை சபையில் நினைவுகூர்ந்த சிறீதரன்

0

யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிதினத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சீறீதரன் சபையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது.

இன்றையதினம், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச்.நந்தசேன மற்றும் டியூடர் குணசேகர ஆகியோருக்கு அனுதாபப் பிரேரணைகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உள்ளிட்டோருக்கு தனது அஞ்சலியை செலுத்தியதுடன், 50 வருடங்களுக்கு முன்னர் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களையும் இந்த சமயத்தில் நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version