Home முக்கியச் செய்திகள் A9 வீதியில் அரச பேருந்து மோதி ஒருவர் பலி

A9 வீதியில் அரச பேருந்து மோதி ஒருவர் பலி

0

கிளிநொச்சி (Kilinochchi) ஏ-09 வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். பருத்தித்துறையில் (Point Pedro) இருந்து இன்று காலை (10.01.2025) திருகோணமலை (Trincomalee) நோக்கி பயணித்த அரச பேருந்தில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், உயிரிழந்த குறித்த நபர் கந்தசாமி கோவிலடியில் வீதியை கடக்க முற்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 75 வயதுடைய யோகலிங்கம் குமரேஸ்வரன் என்பவரே  உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version