நடிகர் அஜித்
நடிகர் அஜித் தற்போது விடமுயற்சி, குட் பேட் அக்லீ என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இது ஒரு புறம் இருக்க நாளை ஐரோப்பிய கார் பந்தயமான ஃபார்முலா 3 பந்தயத்தில் அஜித்குமாரின் ரேசிங் அணி கலந்து கொள்ளவுள்ளது.
அதன் காரணமாக, சில தினங்களுக்கு முன் அஜித்குமார் பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது அவரது கார் பெரும் விபத்துக்குள்ளானது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. அதிர்ஷ்டவசமாக அஜித் காயங்கள் எதுவும் இல்லாமல் தப்பித்தார்.
அவன் மனசுக்கு கண்டிப்பாக அது நடக்கும்.. விஷால் குறித்து நடிகர் ஜெயம் ரவி நெகிழ்ச்சி
அஜித் பல வருடங்களுக்கு முன்பே பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்ட நிலையில், அவர் பில்லா படத்தின் ரிலீஸின் போது அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
என்ன தெரியுமா?
அதில், அஜித் அந்த பேட்டியில் பேசி கொண்டிருந்த போது ரசிகை ஒருவர் கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது அஜித்குமார், மிஸ்டர் கமல்ஹாசன் அல்லது கமல்ஹாசன் சார் என்று சொல்லுங்கள் என சிரித்துக் கொண்டே ரசிகையின் தவறைத் திருத்தினார். அந்த நேரத்தில் அஜித் முகம் சட்டெனெ மாறியது குறிப்பிடத்தக்கது.