Home சினிமா ரஜினியுடன் கூலி, எப்படி உள்ளது தெரியுமா?.. ஸ்ருதிஹாசன் ஓபன்

ரஜினியுடன் கூலி, எப்படி உள்ளது தெரியுமா?.. ஸ்ருதிஹாசன் ஓபன்

0

ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன்.

ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது, இவர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கூலி படத்தை குறித்தும், லோகேஷ் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

ஓபன் 

அதில், ” கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றும் நான் கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருந்தேன். பிறந்தநாள் அல்லது பண்டிகை அன்று இது போன்று வேலை செய்து கொண்டிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

எனக்கு நீண்ட நாட்களாக லோகேஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது கூலி படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறி உள்ளது.

சிவகார்த்திகேயனை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் செஸ் சாம்பியனுக்கு கொடுத்த பரிசு.. எதிர்பார்க்காத ஒன்று

மேலும், கூலி படத்தில் ரஜினி சார் உடன் நடிப்பது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது. அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version