Home முக்கியச் செய்திகள் சிங்கப்பூர் அமைச்சர் – கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

சிங்கப்பூர் அமைச்சர் – கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

0

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரும் சட்ட அமைச்சருமான காசிவிசுவநாதன் (Kasiviswanathan Shanmugam) சண்முகம், கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின்
தலைவருமான செந்தில் தொண்டமானை (Senthil Thondaman) சந்தித்துள்ளார்.

குறித்தச் சந்திப்பானது கொழும்பில் (Colombo) இடம்பெற்றுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம்

இச்சந்திப்பில் இரு நாட்டுக்குமான நட்பை வலுப்படுத்துவது குறித்து
கலந்துரையாடப்பட்டதுடன், சிங்கப்பூர் (Singapore) முதலீட்டாளர்களை கிழக்கு மற்றும்
மலையத்தில் முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்
மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமானுக்கு அமைச்சர் சண்முகம் சிங்கப்பூர் அரசு
சார்பாக அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version