சிறகடிக்க ஆசை
விஜயா, தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதை நடக்காமல் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். அப்படி சமீபத்தில் அவர் செய்த காரியம் தான் இன்றைய எபிசோடில் பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
பார்வதி யூடியூப் வீடியோ போடுவது விஜயாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை, எனவே பார்வதி மகனுக்கு போன் செய்து தவறாக கூறியுள்ளார். பார்வதி மகன் வீட்டிற்கு வந்து தனது அம்மாவை இன்னொருவருடன் சேர்த்து வைத்து பேச பெரிய பிரச்சனை ஆனது. ஆனால் முத்து-மீனா அந்த இடத்தில் பார்வதிக்கு ஆதரவாக இருந்தார்கள்.
விஜயா தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என தெரிந்துகொண்ட பார்வதி அவரை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்கிறார்.
புரொமோ
இன்றைய எபிசோட் இந்த கதைக்களத்துடன் முடிய தற்போது புதிய பிரச்சனை தொடங்கியுள்ளது.
அதாவது மனோஜ் தொழில் தொடங்க ஒருவரிடம் ரூ. 30 லட்சம் வாங்கியுள்ளார், ஆனால் கடன் கட்டவில்லை என தெரிகிறது. பணம் கொடுத்தவர் வீட்டிற்கு வந்து மிரட்ட, உனது அப்பா அல்லது அம்மா பணத்திற்கு பொறுப்பு என கையெழுத்து போட கேட்கிறார்.
இந்த சம்பவத்தில் அண்ணாமலை ஷாக் ஆகி இருக்க முத்து மனோஜ் மீது கோபப்படுகிறார். உடனே மனோஜ் எனக்காக யாரும் கடன் அடைக்க வேண்டாம், சொத்தை பிரித்து கொடுங்கள் என்கிறார்.
இதனால் அனைவருமே ஷாக் ஆகிறார்கள். இதோ புதிய புரொமோ,
