Home சினிமா ரோஹினி முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட வித்யா… சிறகடிக்க ஆசை பரபரப்பான எபிசோட்

ரோஹினி முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட வித்யா… சிறகடிக்க ஆசை பரபரப்பான எபிசோட்

0

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக ஒடிக் கொண்டிருக்கிறது.

ரோஹினி திருட்டுச் செயின் வாங்கிய பிரச்சனையில் சிக்கியுள்ளார். அசிங்கப்பட்ட விஜயா எனக்கு நீ 1 லட்சம் கொடுத்தே ஆக வேண்டும் என ரோஹினி மீது செம கோபத்தில் உள்ளார்.

சிட்டியிடம் முதலில் சண்டை போட்ட ரோஹினி அடுத்து வித்யாவின் வருங்கால கணவரிடம் கேட்டுள்ளார். அதன்பின் ஸ்ருதியிடம் கேட்டு நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டார்.

எபிசோட்

இன்றைய எபிசோடில், வித்யா ரோஹினியை வீட்டிற்கு அழைத்து செம சண்டை போட்டுள்ளார். எனது வருங்கால கணவரிடம் எப்படி பணம் கேட்கலாம், உனக்கு என்ன உரிமை உள்ளது.

அவர் என்னை என்ன நினைப்பார், சரி தான் நீ உன் வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் ஏமாற்றுகிறாய், என்னை ஏமாற்ற எவ்வளவு நேரம் ஆகும்.

நீ யாரைப்பற்றியும் கவலைப்பட மாட்டாய், உன் அம்மா, குழந்தை பற்றியே கவலைப்படவில்லை என பழைய விஷயங்களை எல்லாம் கூறியுள்ளார்.

இருவரின் விறுவிறுப்பான சண்டையோடு எபிசோட் முடிந்துள்ளது.

தேவயானியும், நானும் பிரிய காரணமே எனது மனைவியா?.. ஓபனாக பேசிய நகுல்

NO COMMENTS

Exit mobile version