Home இலங்கை அரசியல் கடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்கள்

கடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்கள்

0

தேர்தலுக்குச் சென்று கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற உறுப்பினர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபை நடவடிக்கை

இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியிலிருந்து வெலிகம பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

NO COMMENTS

Exit mobile version