ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான கலந்துரையாடல்களுக்கான முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அங்கீகரித்துள்ளது.
அதன்படி, கலந்துரையாடல்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டு கட்சிகளும் எதிர்காலத்தில் இணைவதற்கான வாய்ப்புக்கள் நிச்சயிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஜித் பிரேமதாசவின் பதவி
எனினும் இந்த கட்சிகள் இணையும்போது, அதில் ரணில் விக்ரமசிங்கவின் பதவி மற்றும் சஜித் பிரேமதாசவின் பதவி என்பவை தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தநிலையில்,பெரும்பாலும் இணைத்தலைவர்கள் என்ற வகையில் இருவரும் செயற்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அரசாங்கத்துக்கு சவால் கொடுக்கவேண்டுமானால் இரண்டு கட்சிகளும் இணையவேண்டும் என்று விருப்பம் முன்பிருந்தே பலராலும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
எனினும் ரணிலும் சஜித்தும் விட்டுக்கொடுக்காத போக்கை கடைப்பிடித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.