சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் ஹனிமூன் சென்ற காளிதாஸ்.. வைரல் புகைப்படங்கள்
இப்படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் வித்யுத் ஜம்வல் நடிக்கின்றனர்.
டைட்டில் டீசர்
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகும் SK23 குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது, SK23 படத்தின் 90% படப்பிடிப்பு முடித்துள்ளது எனவும், படத்தின் டைட்டில் டீசர் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.