Home இலங்கை அரசியல் இன்று அனுதாபத்திற்கு உள்ளாகி இருக்கும் ரணிலின் மற்றுமொரு கொடூர பக்கம்

இன்று அனுதாபத்திற்கு உள்ளாகி இருக்கும் ரணிலின் மற்றுமொரு கொடூர பக்கம்

0

தற்போதைய அரசியல் களத்தில் மற்றும் சர்வதேச அளவில் பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகி இருக்கும் விடயம்தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைது.

வெளிநாட்டு பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையடுத்து, உடல் நல குறைவால் நள்ளிரவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, பின்பு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் அவர் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்தநிலையில், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை உருவாக்கியுள்ளது.

அதாவது, ஒருபக்கம் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கி தவித்த போது நாட்டை ஏற்று நம்மை வாழ வைத்த நல்ல தலைவர் ரணில் விக்ரமசிங்க என்ற அடிப்படையில் மக்கள் தமது அனுதபாபங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மற்றுமொரு பக்கம், இதற்கு எதிராக கருத்துக்கள் வெளியாகி அவரது கடந்த காலங்கள் தூசு தட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

இது ஊழலை தாண்டிய ரணில் விக்ரமசிங்கவின் மற்றுமொரு முகத்தை மக்களிடமிருந்து மறைப்பதுடன் அவரின் கடந்த காலங்களின் கொடூர குற்றங்கள் மழுங்கடிக்கப்படுவதற்கான ஒரு சூழலையும் உருவாக்கி வருகின்றது.

அதில் முக்கியமாக யாராலும் மறுக்க மற்றும் மறக்க முடியாத விடயம்தான் பட்டலந்த சித்திரவதை முகாம்கள் .

பல இளைஞர், யுவதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு வார்த்தையால் கணிக்க முடியாத கொடூர சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்படுவதை கதிரையில் அமர்ந்து ஒருவர் ரசித்த அந்த ஒரு கொடூர பக்கம் இன்று மக்களால் புறக்கப்பட்டுள்ளது.

அது வேறு யாருமல்ல இன்று அனுதாபத்தின் கண்ணோட்டத்தில் வலம் வருபவரும் அன்று இந்த வதை முகாமின் சூத்திரதாரியென குற்றம்சாட்டப்பட்டவருமான அப்போதைய அமைச்சரான ரணில் விக்ரமசிங்கதான்.

இவ்வாறு பல கொடூர பக்கங்கள் இன்று புறக்கணிக்கப்பட்டு தற்போது அவரின் கைதுக்கு அரசியல் தலைமைகள், மக்கள் மற்றும் சர்வதேசம் என பலதரப்பிலிருந்து எதிர்ப்புகள் வெளியாகுவது வேடிக்கையாக கருதப்பட்டாலும் ரணில் விக்ரமசிங்கவின் கைதையடுத்து சில அரசியல் தலைமைகள் பயந்து இருப்பதன் எதிரொலியாகவே அவர்களின் எதிர்ப்பு பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில்,

  1. இன்று மக்கள் அனுதாபத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க என்ற மனிதர்
    உண்மையில் யார் ?
  2. ஒரு சாதுவான வேடத்துள் இருக்கும் ஒரு கொடூரனின் உண்மை முகம் எப்படியிருக்கும் ?
  3. கடந்த காலப்பதிவுகளில் நிகழ்ந்த அநியாயங்களுக்கும் அதன் அவலங்களையும் ஒரு சூத்திரதாரியாக சுமந்து நிற்கும் ரணில் விக்ரமசிங்க பற்றிய
    சில அறியப்படவேண்டிய உண்மைகள்.

என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றை ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/9wqWpzGm3mc

NO COMMENTS

Exit mobile version