Home உலகம் உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் கனடா

உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் கனடா

0

CA$1 பில்லியனுக்கும் அதிகமான (US$700 மில்லியனுக்கும் அதிகமான) மதிப்புள்ள உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாக உக்ரைன்(ukraine), கனடாவிலிருந்து(canada) ட்ரோன்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்களை இந்த மாதம் பெறவுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது கனேடிய பிரதமர் மார்க் கார்னி(mark carney) இந்த ஆயுத உதவி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

உறுதியளித்ததை மீண்டும் நினைவு கூர்ந்த கனடா பிரதமர்

ஜூன் மாதம் G7 உச்சிமாநாட்டின் போது, ​​கனடா உக்ரைனுக்கு கூடுதலாக CA$2 பில்லியன் (சுமார் US$1,45 பில்லியன்) இராணுவ உதவி வழங்கப்படுமென உறுதியளித்ததாக கார்னி மீண்டும் தெரிவித்தார்.

இந்தத் தொகையில் 1 பில்லியனுக்கும் அதிகமான தொகை, ட்ரோன்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் வழங்குவதன் மூலம் உக்ரைனின் ஆயுதக் களஞ்சியத்தை வலுப்படுத்துவதற்காக செலுத்தப்படும் என்றும், அவை அடுத்த மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

 ஆயுத உதவிக்கு ஒதுக்கப்படவுள்ள கோடிக்கணக்கான டொலர்

அவசர மருத்துவ உதவி, வெடிகுண்டு முகாம்களை நிர்மாணித்தல், உள்ளூர் ஜனநாயகத்திற்கான ஆதரவு மற்றும் உக்ரைனின் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக கனடா கோடிக்கணக்கான டொலர்களை ஒதுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதிலும், போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு வேலைகளிலும் தனது நாடு உக்ரைனின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும் என்று கார்னி வலியுறுத்தினார்.

புடினை நிறுத்த முடியும் என்றும், ரஷ்யாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதாகவும், கூட்டணி வலுவாகவும், உறுதியானதாகவும், ஒற்றுமையாகவும் வளர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version